தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. நெருக்கடியில் நிதிஷ்.. CM நாற்காலி யாருக்கு?
பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவு வெளியான நிலையில், பாஜக கூட்டணியை விட்டு நிதிஷ்குமார் வெளியேறுவாரா என்ற கேள்வி எழும்பியுள்ளது. ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை என்ற நிலையில், அதை விட கூடுதலாக சுமார் 80 இடங்களை பாஜக கூட்டணி வென்றுள்ளது. ஆனால், நிதிஷ்குமாரை மீண்டும் முதல்வராக்க பாஜக தயங்கினால், அவர் கடந்த காலங்களைப் போல கூட்டணியை விட்டு விலகலாம் என்ற பேச்சு பீகாரில் அடிபடுகிறது. அதேசமயம், 85 இடங்களில் வென்ற நிதிஷ்குமாரை தவிர்த்து பாஜக கூட்டணியால் ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதேபோல நிதிஷ்குமார் காங்கிரஸ் பக்கம் தாவினாலும் ஆட்சியமைப்பதற்கு வேண்டிய மெஜாரிட்டி இந்தியா கூட்டணிக்கு கிடைக்க போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
