Jayakumar | அதிமுகவை விட்டு விலகி தவெகவில் இணைந்தது ஏன்? - உடைத்து சொன்ன ஜெயக்குமார்
அதிமுகவை விட்டு விலகி தவெகவில் இணைந்தது ஏன்? - உடைத்து சொன்ன ஜெயக்குமார்
Jayakumar | அதிமுகவை விட்டு விலகி தவெகவில் இணைந்தது ஏன்? - உடைத்து சொன்ன ஜெயக்குமார் #dmk #jayakumar #aiadmk #tvk #jayakumar #thanthitv திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் என்ற எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டை ஏற்க முடியாததால், அதிமுகவை விட்டு விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக பெருந்துறை முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த பிறகு பெருந்துறைக்கு வந்த ஜெயக்குமார், தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனுடன் இணைந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்ஜிஆர் - ஜெயலலிதா கொள்கையில் பயணித்த தங்களுக்கு அந்த முடிவு ஏமாற்றம் அளித்ததாகவும், எதிர்காலம் தவெக தலைமையில்தான் இருப்பதாக நம்புவதாகவும் தெரிவித்தார்.
