Election survey | 2026ல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார் ?வெளிவந்த கருத்துக்கணிப்பு முடிவு
தமிழ்நாட்டில் யார் அடுத்த முதலமைச்சராக வர வாய்ப்புள்ளது என்று இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 5ம் தேதி முதல் ஜூன் 17ம் தேதி வரை 234 சட்டமன்றத் தொகுதிகளில் இந்த கருத்துகணிப்பானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் முதலமைச்சர் ஸ்டாலின் 77.83 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளார். எடப்பாடி பழனிசாமி 73.30 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும்,
உதயநிதி ஸ்டாலின் 67.99 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார். மேலும், அண்ணாமலை 64.58, விஜய் 60.58 சதவீதத்துடன் 4 மற்றும் 5 இடத்தில் உள்ளனர்.
தற்போது உள்ள சூழலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 17.7 சதவீதம் பேர் திமுக என்றும், 17.3 சதவீதம் பேர் அதிமுக என்றும்,
12.20 பேர் தவெக என்றும், 5 சதவீதம் பேர் பாஜக என்றும் கூறியுள்ளனர்.
