ஓம்பிர்லாவின் அரசியல் பயணம்...

மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஓம் பிர்லா, ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினராக இணைந்து, தமது அரசியல் வாழ்க்கையை துவக்கி உள்ளார்.
ஓம்பிர்லாவின் அரசியல் பயணம்...
Published on
மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஓம் பிர்லா, ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினராக இணைந்து, தமது அரசியல் வாழ்க்கையை துவக்கி உள்ளார். மாணவர் சங்க தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார். பின்னர் மாநில அளவிலும், மத்திய அளவிலும் கட்சி ரீதியில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட அவர், 2003ஆம் ஆண்டு, முதல்முறையாக கோடாவிலிருந்து எம்எல்ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். அதே தொகுதியில் மேலும் இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றுள்ளார். பின்னர், 2014ஆம் ஆண்டில் கோட்டா தொகுதியில் இருந்து வெற்றி பெற்று எம்.பி., ஆனார்.
X

Thanthi TV
www.thanthitv.com