கட்சி யாருக்கு? விடாப்பிடியாய் ராமதாஸ்.. அன்புமணி எடுத்த `லீகல்’ முடிவு

x

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு செல்லாது என டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தை அன்புமணி தரப்பு நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக சமர்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் செல்லாது, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என மின்னஞ்சல் மூலமாக அன்புமணி தரப்பும் முறையிட்டுள்ளனர் . இந்த நிலையில், அன்புமணி தரப்பில் நேரடியாக டெல்லி சென்று, தலைமை தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என சமூகநீதிப் பேரவையின் அணி மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்