"அமித்ஷாவை சந்தித்த போது நான் சொன்னது" - ஈபிஎஸ் பரபரப்பு X பதிவு
"அமித்ஷாவை சந்தித்த போது நான் சொன்னது" - ஈபிஎஸ் பரபரப்பு X பதிவு
தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதனை எதிர்க்கும் முதல் குரல் தன்னுடையதாக இருக்கும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும், அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை, மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தபோதே தான் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
"கூட்டணி அறிவிக்கையின்போதே அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கின்ற கட்சிகள் திமுக கூட்டணியில்தான் இருக்கின்றன, தவிர இங்கு யாரும் அப்படி இல்லை!" என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Next Story
