Tamilisai | BJP | ``அவங்க களத்துக்கு போனா தான் தெரியும்..'' | தனது ஸ்டைலில் தமிழிசை அட்டாக்
Tamilisai | BJP | ``அவங்க களத்துக்கு போனா தான் தெரியும்..'' | தனது ஸ்டைலில் தமிழிசை அட்டாக் #tamilisai #BJP #TNElection2026 #thanthitv பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தீவிர வாக்கு சேகரிப்பு சென்னை மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று ஆட்டோவில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் மற்றும் கட்சித்தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகளுக்கு வேலையில்லை எனக் கூறும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, இந்தத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் வேலையில்லாமல் செய்யப்போகிறார்கள் என விமர்சித்தார். மேலும் புதுச்சேரியைப் போல் தமிழகத்திலும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்றும், அவ்வாறு வாக்குகள் அதிகரித்தால் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் ஜனநாயகன் திரைப்படக் காட்சிகள் வெளியானது குறித்து பேசிய தமிழிசை, தயாரிப்பாளர்கள் கவனத்துடன் இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
