Senthilbalaji | "கொங்கு மண்டலத்தில் பவரை காட்டுவோம்"- செந்தில் பாலாஜி

"கொங்கு மண்டலத்தில் பவரை காட்டுவோம்"- செந்தில் பாலாஜி

#karur | #senthilbalaji | #DMK "கொங்கு மண்டலத்தில் பவரை காட்டுவோம்"- செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் - செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் கடந்த தேர்தலை விட இந்த முறை அதிக இடங்களில் திமுக மிகப்பெரிய வெற்றிபெறும் என, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூரில் திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் பேரணியாக சென்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதற்காக பழைய பேருந்து நிலையத்திலிருந்து திமுகவினர் ஊர்வலமாக சென்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, கரூர் தொகுதியில் ஆசி தியாகராஜன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனவும், தேர்தலில் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது உறுதி எனவும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com