"தமிழகத்தில் ஏழை என்ற சொல் இல்லாத நிலையை உருவாக்குவோம்" -பிரச்சாரத்தில் EPS அதிரடி பேச்சு

x

"தமிழகத்தில் ஏழை என்ற சொல் இல்லாத நிலையை உருவாக்குவோம்" -பிரச்சாரத்தில் EPS அதிரடி பேச்சு

தமிழகத்தில் ஏழை என்ற சொல் இல்லை என்ற நிலையை உருவாக்குவது தான் அதிமுகவின் லட்சியம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசாரத்தில் விருதுநகரில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிறைய திட்டங்களை வைத்துள்ளது, அனைத்தும் தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் என்றார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், முதலமைச்சரின் பிரசார பயணத்தை விமர்சித்த ஈபிஎஸ், எதிர்க்கட்சியாக இருக்கும்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் நிலை என்ன எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்