``ஜனவரிக்குள்ள முடிச்சாகணும்’’ - CM அதிரடி
உடன்குடி அனல் மின் திட்டம் பணிகளை ஜனவரிக்குள் முடிக்க CM ஸ்டாலின் உத்தரவு
உடன்குடி அனல் மின் திட்டம் அலகு ஒன்றிற்கான பணிகளை 2026 ஜனவரிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தொழில், எரிசக்தி, மருத்துவம், சுற்றுலா உள்ளிட்ட 6 துறைகளின் கீழ், 58 கோடியே 740 லட்சம் ரூபாய் மதிப்பிலான 27 முத்திரை திட்டங்களின் பணிநிலை பற்றி ஆய்வு செய்யப்பட்டது.இதில் சிவகங்கையில் மினி டைடல் பூங்கா பணிகள் நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
சூலூர் பாதுகாப்பு உபகரண உற்பத்தி பூங்கா, ஓரகடம் மருத்துவ சாதன பூங்கா ஆகியவையை ஜனவரிக்குள்ளும், 5
கோவை பொது பொறியியல் மையம் பிப்ரவரி 2026-க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது.
இதேபோல 13 ஆயிரத்து 76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உடன்குடி அனல் மின் திட்டம், 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருச்சி அரசு மருத்துவமனை பணிகள் உள்ளிட்டவையை விரைவில் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதேபோல, நீலகிரியில் சூழல் பூங்கா அமைப்பதற்கு பிப்ரவரி 2026-க்குள் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவங்கப்படும் என துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
