``ஆளுநர் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்..’’ - உச்சநீதிமன்றம்
ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக வழக்கு தொடரத் தேவையான இசைவாணை குறித்து வரும் ஏப்ரல் 14ம் தேதிக்குள், சட்டப்படி ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில், ஆளுநரிடம் நிலுவையில் உள்ள இசைவாணை கோரும் கோப்பு குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் 3 வேலை நாட்களில் கலந்து ஆலோசித்து எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல, மார்ச் 12ம் தேதியே இது குறித்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த கோப்பை தமிழ்நாடு அரசு மீண்டும் அனுப்பியதாகவும், அந்த கோப்பு உடனடியாக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும் என ஆளுநர் அலுவலகம் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இடையீட்டு மனு விசாரணையில், இவை தெரிவிக்கப்பட்டு உள்ளன.
Next Story
