"த.வெ.க வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தவில்லை" - விஜய பிரபாகரன்

x

த.வெ.கவுடன் இதுவரை கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடத்தவில்லை என,தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த, தேமுதிக இளைஞர் அணி செயலாளர் பல்வேறு கட்சி நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலில், தேமுதிகவினர் அதிக பேர் சட்டமன்றம் செல்வார்கள் என தெரிவித்தார். மேலும், த.வெ.க தலைவர் விஜயுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தவில்லையென்றும், தங்கள் கட்சி சார்பில் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்