"விஜய்யை முதல்வராக ஜார்ஜ் கோட்டையில் அமர வைக்க உழைக்கிறோம்"த.வெ.க மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன்
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யை, 2026ல் முதல்வராக ஜார்ஜ் கோட்டையில் அமர வைக்க உழைத்துக் கொண்டிருப்பதாக, அக்கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் தெரிவித்தார். தமிழக வெற்றிக்கழக வேலூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வேலூர், அணைக்கட்டு மற்றும் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் வேலூர் அடுத்த அரியூரில் உள்ள நாராயணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றிய தமிழக வெற்றிக்கழகத்தின் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன், த.வெ.க தலைவர் விஜய்யை முதல்வராக ஜார்ஜ் கோட்டையில் அமர வைக்க உழைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
Next Story
