``தளபதிக்காக மட்டும் தான் சகிச்சிகிட்டு இருக்கோம்’’ - அழுத தவெக பெண் நிர்வாகி

x

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தவெக மேற்கு நகரச் செயலாளர் இப்ராஹிம், தங்களை திட்டமிட்டு புறக்கணிப்பதாக பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல் இருப்பது மட்டுமின்றி, முறையான தகவல்களும் வழங்குவதில்லை என ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தங்களை ஜாதி ரீதியாக புறக்கணிக்கிறாரோ என்ற மனவேதனை இருப்பதாகவும் குமுறியுள்ளனர்.

இது குறித்து புகார் அளித்தும் தவெக தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பெண் நிர்வாகிகள் கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்