"தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ரூ.3.5 லட்சம் கோடி நிதி" - பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

அடுத்த 5 ஆண்டுகளில் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக, மூன்றரை லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
"தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ரூ.3.5 லட்சம் கோடி நிதி" - பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
Published on
ஹரியானா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, ஹிசாரில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, விவசாயிகள், பெண்களின் நலன் காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். தண்ணீர் பிரச்சனையை தீர்க்க, நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மேலும் 2024 ஆம் ஆண்டிற்குள், வீட்டுக்கு பயன்படுத்தப்படும் நீரை, மறுசுழற்சி செய்து, பாசனத்திற்கு உபயோகித்து கொள்ளும், நடைமுறை, வெற்றிகரமாக செய்து முடிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com