Waqf Act Protest | வக்பு விவகாரம் - தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள்
வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாணியம்பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், திமுக எம்பி கதிர் ஆனந்த், விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்று, வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றினர். ராமநாதபுரம், சந்தை திடல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் செல்போன் விளக்குகளை உயர்த்தி, நூதன முறையில் தங்கள் எதிர்பை வெளிப்படுத்தினர். கரூர், ஆசாத் சாலையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில், உலமா சபை தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை, சின்ன கடை வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஐக்கிய ஜாமத்துல் உலமா அமைப்பு உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கலந்து கொண்டு, வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.