"தொண்டர்கள் மனம் அறிந்து செயல்பட வேண்டும்" - ராகுல்காந்தி

பாஜகவின் சித்தாந்தத்திற்கு எதிராகவும், பொதுப் பிரச்சினைகளுக்காகப் போராடும் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களையும் வாழ்த்துவதாக, ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
"தொண்டர்கள் மனம் அறிந்து செயல்பட வேண்டும்" - ராகுல்காந்தி
Published on

பாஜகவின் சித்தாந்தத்திற்கு எதிராகவும், பொதுப் பிரச்சினைகளுக்காகப் போராடும் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களையும் வாழ்த்துவதாக, ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, தலீகாவோவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியினிடையே பேசினார். அப்போது, காங்கிரசில் இருந்து விலகியவர்களுக்கு மீண்டும் கட்சியில் இடம் கிடையாது என்று கூறினார். காங்கிரஸ் தொண்டர்களின் மனநிலையை அறிந்து செயல்பட வேண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சர்,

சிதம்பரத்திடம் வலியுறுத்தியதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கூட்டம் தொடங்குவதற்கு முன்னர், ராகுல்காந்தி கால்பந்தை உதைத்து கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com