காதலனுக்கு எதிராக வாய்ஸ் மெசேஜ் - சிறுமி எடுத்த முடிவு
திருநின்றவூர் அருகே 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநின்றவூரை சேர்ந்த 17 வயது சிறுமி, தனது வீட்டருகே வசிக்கும் ராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். சில தினங்களாக இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது சாவுக்கு காரணம் ராஜ் மற்றும் அவரது குடும்பத்தார் என்றும், தன்னை குடும்பத்தாரும் மன்னிக்க வேண்டும் எனவும் சிறுமி தனது சகோதரிக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
