Salem | Police | VCK | கருப்பூர் டோல்கேட்டை அகற்றக் கோரி விசிகவினர் சாலை மறியல்
Salem | Police | VCK | கருப்பூர் டோல்கேட்டை அகற்றக் கோரி விசிகவினர் சாலை மறியல் #Salem #Tollgate #VCK #Police சேலம் கருப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் டோல்கேட்டை அகற்றக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். டோல்கேட்டின் உரிமம் காலாவதியாகிவிட்டதாகவும், உள்ளூர் மக்களுக்கான சலுகைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். ஓமலூர் தொகுதி மாவட்ட செயலாளர் சாம்ராய் குரு தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர், டோல்கேட் பகுதியில் இருபுற சாலைகளிலும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்
