அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்த வந்த பாஜகவினரை தடுத்து நிறுத்திய ஊர் மக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அம்பேக்தர் உருவபடத்திற்கு பா.ஜ.கவினர் மரியாதை செலுத்த கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அம்பேக்தர் உருவப்படம் அருகே பா.ஜ.க கொடி, பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்த அகரம் கிராமமக்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பர்கூர் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் பா.ஜ.கவினர் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
Next Story
