திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார்
தவெக தலைவர் விஜய்யின் முன்னாள் மேனேஜரும், கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனருமான, பி.டி.செல்வகுமார் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். விஜய்யின் புலி படத்தை தயாரித்துள்ள இவர், சுறா, வில்லு, போக்கிரி போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் பி.ஆர்.ஓவாக பணியாற்றியுள்ளார். மேலும் இவரது இயக்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும் திமுகவில் இணைந்தனர்.
