விஜய் பிறந்தநாள் - நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிய தவெக தொண்டர்கள்
தமிழக வெற்றிக் கழக நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில், த.வெ.க தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, 551 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில், மாவட்டச் செயலாளர் ஜாகீர் உசேன் தலைமையில் ரத்ததான முகாம், மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும், பல்வேறு பகுதிகளில் அன்னதானம் மற்றும் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன் தலைமையில், வி.கே.புரத்தில் 551 பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி கவுரவிக்கபட்டனர். விழாவில், த.வெ.க தலைவர் விஜய், மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் படம் பொறித்த சாக்லேட்டுகளும் வழங்கப்பட்டன.
Next Story
