Vijay | TVK | நேற்று தலைமை செயலகத்திற்கு வந்து சென்ற விஜய் - ஒருவருக்கு நேர்ந்த சோகம்
#vijay #tvk தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் விஜய் நேரில் புகார் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படும் 10 முக்கிய அதிகாரிகளை உடனடியாக மாற்றக் கோரி, தலைமைச் செயலகத்தில் தவெக தலைவர் விஜய் புகார் மனு அளித்துள்ளார். செங்கோட்டையன், சிடி. நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகம் சென்ற விஜய், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட 10 உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்யக் கோரி, தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் மனு அளித்தார். இந்த பட்டியலில் உள்ள 10 பேரும், தவெகவின் பிரச்சாரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிட்டு முட்டுக்கட்டை போடுவதாக மனுவில் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். நேர்மையான மற்றும் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற வேண்டுமெனில், தேர்தல் முடியும் வரை இந்த அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன், தங்களது கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அதிகாரி கூறியதாக தெரிவித்தார். இதனிடையே, தலைமைச் செயலக வளாகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், அங்கு பணியில் இருந்த போலீஸ் ஒருவருக்கு கை முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்
