Vijay | Vijay Latest News | TVK Vijay | Vijay Campaign | விஜய் சூறாவளி சுற்றுப்பயணம்

x

ஒரே நாளில் 3 மாவட்டங்களில்... 112 கி.மீ பயணிக்கும் விஜய்

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களில் ஒரே நாளில் சுற்றுப்பயணம் செய்ய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில், வரும் 13-ம் தேதி திருச்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். சுமார் 112 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரே நாளில் பயணம் செய்து, திருச்சி, அரியலூர், குன்னம், பெரம்பலூர் ஆகிய நான்கு இடங்களில் உரையாற்ற இருக்கிறார்.

காவல்துறை அனுமதிக்காக அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மனு கொடுத்துள்ள நிலையில், அதுகுறித்து காவல்துறையினர் பரிசீலித்து வருகின்றனர்.

முதல் நாள் சுற்றுப்பயணத்தை முடித்து சாலை மார்க்கமாக சென்னை திரும்பும் வகையில் பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சனைகள் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து விஜய் பேசுவார் என கூறப்படுவதால், மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்