Vijay | TVK | TN Politics | விஜய் பரபரப்பு அறிக்கை

விஜய் பரபரப்பு அறிக்கை

Vijay | TVK | TN Politics | விஜய் பரபரப்பு அறிக்கை ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவை திமுக அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சரின் ஆயிரத்து 20 கோடி ரூபாய் ஊழல் குறித்து அமலாக்கத் துறை ஆதாரங்களை கொடுத்தும் திமுக அரசு கண்டு கொள்ளாமல் இருந்து வந்தது என்று குறிப்பிட்டுள்ளார். உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே, அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சரை திமுக அரசு தாமாகவே பதவி விலகுமாறு சொல்ல வேண்டும் அல்லது அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com