Vijay | TVK | ``ப்ளீஸ்.. தயவுசெஞ்சி..’’ - தவெக திடீர் Request

Vijay | TVK | ``ப்ளீஸ்.. தயவுசெஞ்சி..’’ - தவெக திடீர் Request

புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம் மேற்கொள்ளும் நிலையில் தவெக வேண்டுகோள் தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், விஜயின் பிரசார வாகனத்தை யாரும் பின் தொடர வேண்டாம் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் விஜயின் பிரசாரத்தை காண கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் நேரில் வரவேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அன்புடன் கேட்டுக்கொள்வதாகவும் நேரில் வராமல் சமூக வலைதளங்கள் தொலைக்காட்சி நேரலையில் பிரசாரத்தை பார்க்குமாறும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com