விஜய் விழாவில் கிழித்தெறியப்பட்ட அழைப்பிதழ்கள்... செய்தவர்கள் யார்..? - N.ஆனந்த் விளக்கம்

x

தவெகவின் இப்தார் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை கிழித்தவர்கள் இஸ்லாமியர்களோ, தங்கள் கட்சியையோ சேர்ந்தவர்கள் அல்ல என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். தவெகவின் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அக்கட்சி தலைவர் விஜய் பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க சுமார் இரண்டாயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு கூடியதால், உள்ளே நுழைய முடியாத சிலர் அழைப்பிதழை கிழித்து எறிந்தனர். இந்நிலையில் அழைப்பிதழை கிழித்தவர்கள் தவெகவினர் கிடையாது என அக்கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்