Vijay | விஜய்க்கு எதிர்பாரா இடத்தில் இருந்து வந்த சிக்கல்? - காங்கிரஸ் புள்ளி சைலண்டாக பார்த்த வேலை
ஜனநாயகனுக்கு தடை விதிக்க கோரி மதுரை காங்கிரஸ் நிர்வாகி தேர்தல் ஆணையருக்கு கடிதம் தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் நடித்த திரைப்படங்களைத் திரையிட தடை விதிக்கக் கோரி மதுரை காங்கிரஸ் நிர்வாகி தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். மதுரை காங்கிரஸ் நிர்வாகி செய்யது பாபு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய் மற்றும் அவரது கட்சி வேட்பாளர்கள் போட்டியிட உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அவரின் திரைப்படங்கள் திரையிடப்படுவது வாக்காளர்களை பாதிக்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. விரைவில் வெளியாக உள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் டிரைலர்கள் மற்றும் விளம்பர பதாகைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தேர்தல் முடியும் வரை திரையரங்குகள் மற்றும் தொலைக்காட்சிகளில் விஜய் நடித்த படங்களை ஒளிபரப்பத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
