விஜய்க்கு சீமான் கிடுக்கிப்பிடி கேள்வி
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் பேசிய அவர், தவெக இரண்டாம் ஆண்டு விழாவில் இடம்பெற்ற GET OUT ஹேஷ்டாக் தற்போது தேவை என கூறினார். இந்தி திணிப்புக்கு எதிராக கையெழுத்திடாத பிரசாந்த் கிஷோரை பாராட்டுவதாக கூறிய அவர், மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தியதை வரவேற்பதாகவும், ஆனால் தமிழை விட்டொழியுங்கள் என கூறிய பெரியாரை கொள்கை தலைவராக ஏற்பதை எப்படி பார்ப்பது எனவும் கேள்வி எழுப்பினார்.
Next Story
