"Places Out Sir"தவெக நிர்வாகிகள் பவுன்சர்கள் இடையே தள்ளுமுள்ளு... பூத் கமிட்டி கூட்டத்தில் பரபரப்பு
தவெகவின் பூத் கமிட்டி கூட்டம் - நிர்வாகிகள், பவுன்சர்கள் இடையே தள்ளுமுள்ளு
கோவையில் தவெகவின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்குள் போலியான அடையாள அட்டைகளுடன் நுழைந்தவர்களை, பவுன்சர்கள் கையும் களவுமாக பிடித்து வெளியேற்றினர்.
கோவை குரும்பபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த இக்கூட்டத்திற்கு வாக்கு சாவடி முகவர்களுக்கு, வழங்கப்பட்ட பிரத்யேக QR Code அடங்கிய அடையாள அட்டைகளில் போட்டோகளை மாற்றி சிலர் உள்ளே நுழைய முயற்சி செய்தனர். இதனிடையே, அடையாள அட்டை இல்லாதவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பவுன்சர்களின் எதிர்ப்பையும் மீறி கருத்தரங்க வளாகத்திற்குள் உள்ளே நுழைந்த சில தொண்டர்களை பவுன்சர்கள் திருப்பி அனுப்பினர்.
Next Story
