``அன்று வீர வசனம்.. இன்று அவர்களுக்கு டப்பிங்’’ - கமலை திடீரென அட்டாக் செய்த தவெக

x

எம்ஜிஆரை போன்று, ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றி விஜய் வெற்றி பெறுவார் என தவெக இணை செய்தி தொடர்பாளர் ரமேஷ், கருத்து பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்ற கமலின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, அவர் கருத்து பதிவிட்டார். அதில், எந்த ஊழல் கூடாரத்துக்கு எதிராக தொலைக்காட்சி பெட்டியை உடைத்து வீர வசனம் பேசினார்களோ, இன்று அங்கேயே இளைப்பாறிக் கொண்டு அவர்களுக்காக டப்பிங் பணி செய்து வருகிறார்கள் என குறிப்பிட்டார். மேலும், எம்ஜிஆரை போல், ரசிகர்கள் மட்டுமல்லாது மக்களையும் விஜய் வாக்காளர்களாக மாற்றுவார் என ரமேஷ் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்