TVK-வின் புதிய App-ஐ அறிமுகப்படுத்தும் விஜய் -வெளியான முக்கிய தகவல்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஜூலை 15ஆம் தேதி My TVK என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சென்னை பனையூர் அலுவலகத்தில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, தேனாம்பேட்டையில் உள்ள தவெக தேர்தல் வியூக நிறுவனத்தில் செயலி குறித்து முழு விளக்கம் அளிக்கப்பட்டது.
ஏற்கனவே, 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை விஜய் நிர்ணயம் செய்திருந்த நிலையில், இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை வேகப்படுத்தும் நோக்கில் இந்த செயலி ஜூலை 15ஆம் தேதி தவெக தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story
