"வெளியுறவுத்துறையின் இந்தி திணிப்பு..!" எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பரபரப்பு ட்வீட்

இந்திய கலாச்சார தொடர்புகளுக்கான கழகம் வெளியிட்ட பணி நியமன அறிவிக்கை அப்பட்டமாக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பதாக உள்ளதாக, சி.பி.எம். எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார். வெளியுறவு அமைச்சகத்தின் அலுவலகங்களில், ஒப்பந்த அடிப்படையில் ஆன தமிழ் ஆசிரியர்களை நியமனம் செய்ய, விரும்பத்தக்க தகுதிகளாக இந்தி மற்றும் சமஸ்கிருத அறிவு குறிப்பிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தி, சமஸ்கிருதம் தொடர்பான அம்சத்தை நீக்குமாறு வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com