

வெங்கய்யா நாயுடுவின் 3 ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் பணிக்காலத்தின் நிகழ்வுகள் அடங்கிய புத்தகத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். 250 பக்கங்களுக்கு மேல் கொண்ட இந்தப் புத்தகத்தை, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் புத்தக வெளியீட்டுப் பிரிவு தயாரித்துள்ளது . குடியரசுத் துணைத் தலைவரின் உள்நாட்டு, வெளிநாட்டு பயணங்கள் உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து படங்களுடன் இந்தப் புத்தகம் விவரிக்கிறது.