"தாய் மொழியை நன்கு கற்றுத் தேர்ந்தவராக இருக்கவேண்டும்" - குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு

ஒவ்வொருவரும் தனது தாய் மொழியை நன்கு கற்றுத் தேர்ந்தவராக இருக்கவேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
"தாய் மொழியை நன்கு கற்றுத் தேர்ந்தவராக இருக்கவேண்டும்" - குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு
Published on

ஒவ்வொருவரும் தனது தாய் மொழியை நன்கு கற்றுத் தேர்ந்தவராக இருக்கவேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, உலகத் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்றவர்களிடையே, இணைய வழியாக அவர் உரையாற்றினார். அப்போது, மொழி என்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு கருவி மட்டுமல்ல, அதற்கும் அப்பாற்பட்டது என்று கூறினார். கலாச்சாரத்தின் பன்முகத் தன்மையையும், மதிப்பு முறைகளையும் பற்றி விரிவாகப் புரிந்து கொள்வதற்காக, பிற மொழிகளை மக்கள் கற்கவேண்டும் என்று வெங்கையா நாயுடு, வலியுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com