வேங்கைவயல் விவகாரம் - செல்வப்பெருந்தகை விடுத்த கோரிக்கை
வேங்கை வயல் விவகாரத்தில், நிரபராதிகளே குற்றவாளிகளாக ஆக்கப்படுகிறார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுளார். சென்னை சத்தியமூர்த்திபவனில், கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பான குறும்படத்தை வெளியிட்ட அவர், வரும் காலங்களில் திமுக தேர்தல் அறிக்கையில் கச்சதீவை மீட்போம் என்ற வாக்குறுதி வேண்டாம் என எடுத்துரைப்போம் என்று கூறினார். வேங்கை வயல் விவகாரத்தில், புகார் கொடுக்க சென்ற நிரபராதிகளே குற்றவாளிகளாக ஆக்கப்படுவதால் மறு விசாரணை செய்யப்பட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Next Story
