Vellore | Vaiko | "அதை செய்ய நினைத்தால் கையே இருக்காது" - வைகோ ஆவேச பேச்சு
பெரியார் சிலையை உடைக்க நினைத்தால் கையே இருக்காது என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
வேலூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய வைகோ, ஒருவர் பெரியார் சிலையை உடைப்பதாக மிரட்டுவதாகவும், நாள் குறித்துவிட்டு வந்தால், அவரது கையை துண்டாக்குவேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
