

வேலூர் மக்களவை தொகுதிக்கு, தேர்தல் வர, திமுகவே காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார். அணைக்கட்டு நகரில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ. சி. சண்முகத்தை ஆதரித்து பேசிய அவர், திமுகவுக்காக உழைத்தவர்கள் பலர் இருக்க, மு.க.ஸ்டாலின், தனது மகனுக்கு, பதவி கொடுத்துள்ளதாக குறிப்பிட்டார். திமுகவில் வாரிசு அரசியல் இருப்பதாக முதலமைச்சர்
எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.