Kashmir Attack || காஷ்மீருக்கு போகாத பிரதமர் மோடி..! கடும் ஆவேசத்துடன் மேடையில் சீறிய திருமா

x

ஷ்மீருக்கு போகாத பிரதமர் - பீகாரில் தேர்தல் பரப்புரை செய்வதா?


காஷ்மீருக்கு போகாமல், பீகாரில் சென்று தேர்தல் பரப்புரை செய்வது ஏன்? என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். திண்டிவனத்தில் மறைந்த விசிக நிர்வாகிகளின் திருவுருவப்பட திறப்பு விழா மேடையில் பேசிய அவர், இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், சகோதரத்துவத்தை சிதைத்து கொண்டு பாஜக அரசு, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும் எனக் கூறுவதை எப்படி ஏற்க முடியும்? என்றும் மோடியை பதவி விலக வேண்டும் என சுப்பிரமணியசுவாமி கூறும் போது, மௌனம் காக்கும் பாஜக, அதை நான் கூறினால் மட்டும் விமர்சிப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். விசிக சார்பில் மதச்சார்ப்பின்மையை காப்பாற்ற, மே 31ஆம் தேதி திருச்சியில் வக்பு சட்டத்திற்கு எதிராக மாநாடு நடத்தபட உள்ளதாக அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்