VCK ADMK | ``அதிமுக கூட்டணியில் விசிக.. விரைவில் நல்ல முடிவு’’ - பொடி வைத்து பேசிய மாஃபா

x

"அதிமுகவுடன் கூட்டணி - விசிக விரைவில் நல்ல முடிவெடுக்கும்" - மாஃபா பாண்டியராஜன் கருத்து

அதிமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேர்வது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் அரசு பள்ளியில் படித்து, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று, மும்பை ஐஐடியில் படிக்க தேர்வாகியுள்ள சாத்தூர் மாணவி யோகேஸ்வரியை தனது வீட்டுக்கு அழைத்து பாராட்டினார். மேலும் மாணவியின் படிப்புக்காக 30 ஆயிரம் ரூபாய் நிதி உதவியையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த தலைமுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டிய கட்சி என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்