TVK Vijay | VCK | TN Election | விஜய் மீது புகாரளித்த விசிக நிர்வாகி பரபரப்பு பேட்டி
நடிகர் விஜய் மீது கோவையில் விசிக நிர்வாகி புகார் பெற்றோரிடம் அடம் பிடித்து தவெகவுக்கு வாக்களிக்க வேண்டும் என குழந்தைகளுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்க்கு எதிராக, விசிக நிர்வாகி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கோவை கணபதி பகுதியை சேர்ந்த விசிக நிர்வாகி பாலகிருஷ்ணன், தனது 5 வயது மகன் விஜய்க்கு வாக்களிக்கும்படி கூறியதாகவும், அதற்கு தாம் மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், விஜய் ஜெயிக்கவில்லை என்றால் தாம் உணவு சாப்பிட மாட்டேன் என்று தனது மகன் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் தனது குழந்தை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய பாலகிருஷ்ணன், தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனதை சிதைத்த விஜய் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
