முதல்வரை சந்தித்த வன்னியர் கூட்டமைப்பினர் - என்ன காரணம்?
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு மணிமண்டபம் அமைத்த முதலமைச்சருக்கு வன்னியர் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்தனர். 1987ம் ஆண்டு இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு பலியான 21 சமூக நீதிப் போராளிகளின் தியாகத்தை போற்றிடும் விதத்தில் கட்டபட்ட மணிமண்டபத்திற்காக நன்றி தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் உடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை அவர்கள், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சரிடம் முன் வைத்ததாகவும் தெரிவித்தனர்.
Next Story