Vaiko Speech | Erode | ``என் அரசியல் வாழ்வின் மிகப் பெரிய பிழை.." | உடைத்து பேசிய வைகோ

``என் அரசியல் வாழ்வின் மிகப் பெரிய பிழை.." | உடைத்து பேசிய வைகோ

“அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தான் என் அரசியல் வாழ்வின் பெரிய பிழை“ அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தான் தனது அரசியல் வாழ்வின் மிகப் பெரிய பிழை என்றும், 19 மாதங்கள் சிறையில் அடைத்த கட்சியுடன் உடன்பாடு வைத்தது மன்னிக்க முடியாத தவறு என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற கோவை மண்டல மதிமுக தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் பேசிய அவர், தான் எடுத்த முடிவால் மதிமுகவின் நம்பகத்தன்மை சிதைந்ததாகவும் கூறினார். தற்போது திமுகவுடன் தோழமை கொள்ளும் முடிவை எடுத்துள்ள நிலையில், எந்த நிபந்தனையும் விதிக்காமல் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்போம் என்றும், திமுக ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேசமாட்டோம் என்றும் வைகோ உறுதியளித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com