காவி நிறத்திற்கு மாற்றப்பட்ட இலச்சினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

பிரச்சார் பாரதி தொலைக்காட்சி செய்தி அலைவரிசை இலச்சினையை காவி நிறத்தில் மாற்றியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மீண்டும் ஆட்சியை நிலைநிறுத்த மிக வேகமாக அரசு துறைகளின் மூலம் பிரச்சாரம் செய்வதற்கும் பாஜக அரசு துணிந்து விட்டது என சாடிய வைகோ, இதன் ஒரு பகுதியாக பிரச்சார் பாரதி தொலைக்காட்சி செய்தி அலைவரிசை இலச்சினை காவி நிறத்தில் மாற்றப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். பிரச்சார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியின் விளக்கம் ஏற்புடையதல்ல எனவும்,

தேர்தல் ஆணையம் இறையாண்மை உள்ளதாக பாரபட்சம் இன்றி செயல்படுமானால் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com