வடகாடு மோதல் - அமைதியை ஏற்படுத்த சீமான் வலியுறுத்தல்

x

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கோவில் திருவிழா மோதல் தொடர்பாக, இருதரப்பு மக்களையும் அழைத்து பேசி அரசு அமைதியை ஏற்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மோதலால் பதற்றமான சூழல் எழுந்துள்ளது மிகுந்த மனவேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் உடைமைகள் சேதமாக்கப்பட்டு, வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது கண்டனத்திற்குரியது என கூறிய அவர், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் 13 பேரை கைது செய்துவிட்டு கலவரத்திற்கு சாதி காரணம் இல்லை என அரசு கூறுவதை எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்