"தினமும் காலண்டரில் ஈபிஎஸ் இதை பார்க்கிறார்" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
எந்த வழியிலாவது இந்தியை திணிக்க வேண்டும் என மத்திய அரசு முயற்சிப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். காரம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் நிதி தருவோம் என மத்திய அரசு கூறி வருகிறது. மேலும், நம்முடைய பாடத்திட்டத்தை மாற்ற முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டிய அவர், தேசிய கீதம் முக்கியம், அதைவிட தமிழ்த்தாய் வாழ்த்தும் முக்கியம் என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், அமாவாசை எப்போது வரும் என தினமும் காலண்டரில் பார்க்கும் ஒரே தலைவர் எதிர்கட்சி தலைவர் தான் என தெரிவித்தார்.
Next Story
