"வாக்குகேட்டு வரவில்லை குடும்பத்தில் ஒருவனாக.." நெகிழ்ந்து பேசிய உதயநிதி
திமுக எப்போதும் சிறுபான்மை மக்களுடன் பயணிப்பது போல, திமுகவிற்கு அரணாக சிறுபான்மை மக்கள் என்றும் இருக்க வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் திமுக சார்பில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பேசிய அவர், தேர்தலுக்காக வாக்குகளை கேட்க வரவில்லை எனவும், குடும்பத்தில் ஒருவனாக ராம்ஜான் வாழ்த்துகளை கூற வந்திருப்பதாக கூறினார்.
Next Story
