அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திடீர் கோரிக்கை | Udhayanidhi Stalin | Thanthitv

அழிந்து வரும் பாரம்பரிய தற்காப்பு கலைகளை பாதுகாக்க வேண்டுமென கரூர் மாவட்டம் புலியூரை சேர்ந்த தற்காப்பு கலை பயிற்றுநர் திருமூர்த்தி கோரிக்கை வைத்துள்ளார். அப்பகுதி சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கு, அடிமுறை, சிலம்பம், மல் கம்பம், கயிறு ஏறுதல் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை திருமூர்த்தி பயின்று வருகிறார். இந்நிலையில், செல்போன் உள்ளிட்டவற்றில் மூழ்கி இருக்கும் இளம் தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் விதமாக, மாவட்ட விளையாட்டு அரங்கில் இதற்கான இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com