Udhayanidhi Stalin | நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு தீவுத்திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வருகை தந்த அவரை இளைஞர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து 50 பேருக்கு புதிய ஆட்டோக்களை வழங்கிய துணை முதல்வர், 21 பெண்களுக்கு இருசக்கர வாகனங்களும், மாற்றுத்திறனாளிகள் 13 பேருக்கு இருசக்கர வாகனங்களும். 10 பேருக்கு டிபன் கடை வண்டியும், இன்னும் 10 பேருக்கு மீன்பாடி வண்டியையும் வழங்கினார். மேலும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கி, அனைவருக்கும் பிரியாணி பரிமாறி சிறப்பித்தார்.
Next Story