Udhayanidhi Stalin | சென்னையில் முதல் 'அயன்மேன் 5i50 டிரையத்லான்' - திரண்டு வந்த 529 வீரர்கள்

x

"அயன்மேன் 5i50 டிரையத்லான்"- தொடங்கி வைத்த துணை முதல்வர்

சென்னை முட்டுக்காடு பகுதியில் இந்தியாவின் முதல் ‘அயன்மேன் 5i50 டிரையத்லான் சென்னை மற்றும் டுயோஸ்கா டூயத்லான் போட்டியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்...

சர்வதேச அளவில் பிரபலமான 51.50 கிலோமீட்டர் என்ற ஒலிம்பிக் தூரத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து அயன்மேன் அமைப்பு நடத்தியது...

5 கிலோ மீட்டர் ஓட்டம், 40 கிலோமீட்டர் சைக்கிள் பயணம், 10 கிலோமீட்டர் ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கி இந்த போட்டி நடைபெற்றது...

தமிழகத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வீரர்கள் உட்பட 529 பேர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்...

ஆசிய அளவில் ஐயன்மேன் டிரையத்லான் போட்டியை நடத்தும் 3-வது நாடாகவும், உலகளவில் 6-வது நாடாகவும் இந்தியா உள்ளது..


Next Story

மேலும் செய்திகள்